டால்மியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை
கல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் கல்கத்தா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர்சோதனை நடத்தினர்.
சி.பி.ஐ.யின் கல்கத்தா அலுவலகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. இதுகுறித்து கல்கத்தா சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில்,டால்மியாவின் வீட்டில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்என்றனர்.
கிரிக்கெட் போட்டிகளை டி.வியில் ஒளிபரப்புவது தொடர்பான ஒப்பந்தங்களில் டால்மியா முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி டால்மியாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில்தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
டால்மியா வீடு தவிர, தனியார் டி.வி. நிறுவன அதிகாரிகள் சிலருடைய வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடந்தது. இதேநேரத்தில், லஞ்சஒழிப்பு அதிகாரிகளும் கல்கத்தா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
1996 மற்றும் 1999ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான உரிமைகள்குறித்த ஒப்பந்தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். முறையான விசாரணைக்குப் பின்இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதுதொடர்பாகவே தற்போதைய திடீர் சி.பி.ஐ. சோதனை என்றுகூறப்படுகிறது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தின. 99-ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை இங்கிலாந்து நடத்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications