"ராஜ்குமார் கடத்தலுக்கு கர்நாடகத்தின் அலட்சியமே காரணம்
சென்னை:
வீரப்பனுக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறி கர்நாடக அரசு அப்பாவி கிராமத்தினரைக்கைது செய்து அவர்களை விடுவிக்காததால்தான் இப்போது நடிகர் ராஜ்குமாரை வீரப்பன்கடத்திச் சென்றுள்ளான் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் ராஜ்குமார் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கையில்,இவ்வாறு தெரிவித்தார் முதல்வர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் பல கட்சிகள் சேர்ந்து இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தன. 3 மணி நேரம் நடந்த தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து கருணாநிதிபேசியதாவது:
வீரப்பன் முன்பு ஒருமுறை கர்நாடக வனத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுவிடுவித்தான். அப்போதே வீரப்பனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தடா கைதிகளைகர்நாடகம விடுவித்திருக்கலாம். ஆனால் அப்போதைய முதல்வர் ஜே.எச்.படேல்அவ்வாறு செய்யவில்லை.
தடா கைதிள் நிலை குறித்து ஜே.எச்.படேலுக்கு நான் பலமுறை கடிதம் எழுதியிருந்தேன்.ஆனால் அவர் எதையுமே கண்டுகொள்ளவில்லை. தடா கைதிகள் குறித்து அப்போதேகர்நாடகம் கவனம் செலுத்தியிருந்தால், இப்போது ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தைத்தவிர்த்திருக்கலாம்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை காட்டுக்கு அனுப்பியதன் மூலம்,பிரிவினைவாதத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் அல்ல.
வீரப்பனுக்கு ரூ. 30 கோடி பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக த.மா.கா எம்.எல்.ஏ. அழகிரிகூறுவதில் உண்மையே இல்லை. அப்படிப் பணம் கொடுத்திருந்தால், எப்போதோராஜ்குமார் காட்டிலிருந்து விடுதலையாகியிருப்பார்.
நெடுமாறன் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கிறார் என்றுகூறுகிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பகிரங்கமாகவே விடுதலைப் புலிகளைஆதரித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது தம்பி என்றெல்லாம்அவர் கூறியுள்ளார்.
வீரமணி சொன்னதெல்லாம் சரி என்று இப்போது அவருடன் இருக்கும் கட்சிகள் கூறினால்,நாங்கள் நெடுமாறனை அனுப்பியதும் சரிதான் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications