டென்மார்க் போன அமெரிக்க தபால் ஓட்டுக்கள்
கோபன்ஹேகன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட 2 தபால் ஓட்டுக்கள் தவறுதலாக, டென்மார்க் நாட்டில் "டெலிவரிசெய்யப்பட்டுள்ளதாக, டென்மார்க் செய்தி நிறுவனமான ரிட்சாவ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலிருந்து இந்த ஓட்டுக்கள் "போஸ்ட் செய்யப்பட்டதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டும்.டென்மார்க் நாட்டிலுள்ள பூனன் தீவிலுள்ள ஓடன்ஸ் தீவில் வசிக்கும் ஒரு வீட்டிற்கு இந்த தபால் ஓட்டுக்கள் வந்துள்ளன.ஓட்டுக்கள் தவிர, வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்குவதற்கான "ஆர்டரும் அதில் இருந்தது.
டென்மார்க் பத்திரிகையொன்றில் இதுகுறித்து செய்தி வந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் ஓட்டுக்கள் மிகவும்முக்கியத்துவம் பெறுகின்றன. மொத்த ஓட்டுக்களில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுக்கள் தபால் ஓட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஓட்டுக்களில் ஒருவரான ஸ்டீவன் போரஸ்ட்டை இதுதொடர்பாக டென்மார்க் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது,அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு அருகேயுள்ள பெல்லுவே என்ற இடத்தில் இந்த ஓட்டு அடங்கிய தபாலை போஸ்ட்செய்ததாக கூறினார்.
இதற்கிடையே, தவறுதலாக வந்த இரண்டு ஓட்டுக்கள் அடங்கிய தபால்களையும் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு, அமெரிக்கதூதரக அதிகாரிகள், டென்மார்க் குடும்பத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உண்மையிலேயே அவை ஓட்டுக்கள்தானாஅல்லது வதந்தியா என்பது குறித்து அவர்கள் விசாரிக்கவுள்ளனர்.
2 ஓட்டுக்களில் ஒன்று ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்காக போடப்பட்டிருந்தது. மற்றொரு ஓட்டு இன்னும் பிரிக்கப்படவில்லை.
வாஷிங்டனில் விழுந்த வாக்குகளில் அல் கோர் 9,36,552 வாக்குகளைப் பெற்றார். புஷ் 8,26,863 வாக்குகளைப் பெற்றார்.இருப்பினும் இன்னும் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. புளோரிடா விவகாரம் தொடர்பாகஇன்னும் குழப்பம் நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications