தடா கைதிகள் வழக்கு: தனி நீதிபதிக்கு கர்நாடக ஐகோர்ட் அனுமதி
பெங்களூர்:
மைசூர் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விரைவில்விசாரித்து முடிக்க சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சந்தன மரக்கடத்தல் வீரப்பனுக்கு உதவியாக இருந்ததாக 1982-ம் ஆண்டு 121 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். கைது செய்யப்பட்ட பின் தடாசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1982-ம் ஆண்டு கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது விசாரணை பல ஆண்டுகளாகநடைபெறாமலே இருந்து வந்தது. 121 பேரில் 70 பேர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர். 51 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றான். ராஜ்குமாரை விடுவிக்க அவன் பல நிபந்தனைகளை விதித்திருந்தான்.அவற்றில் ஒன்று மைசூரில் இருக்கும் தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது.
இந்த கோரிக்கையை ஏற்று சிறையில் இருக்கும் 51 தடா கைதிகள் மீது தொடுக்கப்பட்டவழக்கில் அவர்களை விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால்இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தடா கைதிகள் மீதான வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க தனி நீதி நீதிபதி அமைக்ககர்நாடக அரசு முடிவு செய்தது, இதற்கு உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications