பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட மாட்டோம் .. பி.சி.சி.ஐ. உறுதி
சென்னை:
மத்திய அரசு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது எனமுடிவெடுத்துள்ளது. அதற்கு கட்டுப்பட்டு நடப்போம் என இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஇந்தியாவில் வந்து விளையாடியது. இதைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தான்சென்று விளையாட திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் கார்கில் போர் வந்தது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்குச் சென்றுவிளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்தது.
தற்போது மத்திய அரசு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது எனமுடிவெடுத்துள்ளது. இது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்ஏ.சி.முத்தையா பேக்ஸ் செய்தி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:
தேச நலனை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லக்கூடாதுஎன மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாங்கள் அதற்கு கட்டுப்பட்டு நடப்போம் எனதெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications