கோவையில் பா.ம.கவின் 200-வது மாநாடு
கோவை:
கோவையில் பிரம்மாண்டமான முறையில் 200 வது சட்டசபைத் தொகுதி மாநாட்டை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டு வருகிறது.இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பாட்டளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதிலும் சிறிய அளவிலான மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த மாநாடுகளை கிராம அளவில் முதலில் நடத்தத்தொடங்கியது.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அடிப்படை வசதிகளை கேட்டறியவும், தங்களது கொள்கைளைப் பரப்பவும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துஇத்தகைய மாநாடுகளை ஆறு மாதங்களுக்கு முன்பு நடத்த தொடங்கியது.
இதுவரை 199 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 200 வது மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் கோவையில் நடத்த முடிவு செய்தது. இதற்காகபந்தல் அமைக்கும் பணி, அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
வ.உ.சிதம்பரனார் மைதானத்தில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு கோவை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்கின்றனர். வரும்19ம் தேதி இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் இங்கு நடக்கிறது.
மாநாடு ஏற்பாடுகளைக் கவனிக்க கோவையில், மாநிலத் தலைவர் ஜி.கே மணி தலைமையில், எம்.பி.,க்கள் இளங்கோவன், மூர்த்தி, துரை மற்றும்எம்.எல்.ஏ.க்கள் கணேசன் , கோவிந்தன், மஞ்சினி ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் 20 கோபுர அமைப்புகள் மற்றும்20 பெரும் அலங்கார வளைவுகள் வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில், நிருபர்களிடம் மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஜி.கே மணி கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டபடி 234 தொகுதிகளில் மாநாடுகளை நடத்தவுள்ளது. இதில், 199 மாநாடுகள் முடிந்தது. 200வது மாநாடுகோவையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தவுள்ளோம். இதில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றுநடக்கவுள்ளது.
டாக்டர் அவர்களின் தியாகம், கொள்கைகள், செயல்திட்டங்களில் மிஞ்சி நிற்பது சமூக நீதியே, உண்மை ஜனநாயகமே, எங்கும் எதிலும் சமநிலையே,மனிதநேயமே, பெண்ணுரிமையே போன்ற 12 தலைப்புகளில் நடக்கிறது.
இந்த கருத்தரங்கிற்கு இளங்கோவன் எம்.பி தலைமை ஏற்கிறார். கணேசன், கோவிந்தன், மஞ்சினி எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகிக்கின்றனர்.பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்தக் கலை நிகழ்ச்சியில் நாடகம், நடனம் நடக்கிறது. இதில் பாட்டளிமக்கள் கட்சியின் கொள்கைகள் விளக்கப்படும் என்றார் மணி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications