மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மெராப்பூர் அருகே மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மொராப்பூர் பகுதி மிகவும் மேடான பகுதியாகும். எல்லா பகுதிகளிலும் அடை மழை பெய்தாலும் இங்கு மட்டும்தூறல்தான் விழும். இதனால் இங்கே குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
மழை பெய்யாததால் மொராப்பூரைச் சுற்றியுள்ள ராமியன அள்ளி, கடத்தானூர், வகுத்துப்பட்டி, குருபரஹள்ளி,தாதனூர் ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் வற்றிவிட்டது.ராமியனஹள்ளியில் 500 அடிக்கு குழாய் கிணறு தோண்டியும் தண்ணீர் வருவதில்லை.
இந்த ஊரில் ஒரே ஒரு ஆழ்குழாய் கிணறு மட்டுமே உள்ளது. இதில் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமேதண்ணீர் வரும். இதனால் இப்பகுதியில் எப்போதும் பெண்கள் குடத்துடன் காணப்படுகின்றனர்.
இதற்கிடையே ஊர்ப்பெரியவர்கள் கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை கொட்டும் என்று கருத்துக்கூறினார்கள்.
இதை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்தது. தாதம்பட்டிமாணிக்கம் மேஸ்திரியின் பஞ்சகல்யாணிக்கும் (பெண் கழுதை) ராமியனஹள்ளி குழந்தை மேஸ்திரியின் கல்யாணிராமனுக்கும் (ஆண் கழுதை) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
பின்னர் வைதீக முறைப்படி அந்த இரண்டு கழுதைகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. புத்தாடைஅணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது வெயில் அடித்ததால் கழுதைகளுக்குக் குடைபிடிக்கப்பட்டது.
கிராம மக்கள் அனைவரும் இந்தக் கல்யாணத்திற்காக மொய் எழுதினார்கள். ரூ 2 ஆயிரம் மொய்ப்பணம்வசூலானது. பின்னர் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல்வழங்கப்பட்டது. இரண்டு கழுதைகளுக்கும் தின்பதற்குக் காகிதங்கள் கொடுக்கப்பட்டன.
திருமணவிழா திருவிழா போல் மிக விமர்சையாக நடந்தது. இனிமேலாவது மழை வருமா என்று கிராம மக்கள்ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications