ராமேஸ்வரம்: அமெரிக்கர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
ராமேஸ்வரம்:
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகே தங்கியிருக்கும் 10 அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
ராமேஸ்வரம் அருகேயுள்ள மெய்யம்புலி என்ற கிராமத்தில் ஒரு கிறிஸ்தவசபை உள்ளது. இந்த சபை அமெரிக்காவில் இருந்து வந்துள்ள ஈவன்மைக்கேல் ஜோசப், அவரது மனைவி ஜெனிமேரி மற்றும் மகள்கள், மகன்கள், உறவினர்கள் அடங்கிய 10 பேர் நடத்தி வந்தனர்.
இவர்கள் 10 ஆண்டுகால சுற்றுலா விசா எடுத்து தங்கி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் கிறிஸ்தவ சபையில் தங்கியிருந்து ஊனமுற்றோர், மனவளர்ச்சிகுன்றியவர்களை பாதுகாப்பது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
மேலும் இவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று கூட்டுப் பிரார்த்தனையும் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் வாங்கி வந்த சுற்றுலா விசாவை 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இவர்கள் கடந்த 6 மாத காலமாகபுதுப்பிக்கவில்லை.
இதனால் அவர்கள் நவம்பர் மாதம் 19 ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications