கர்நாடக அதிரடிப்படைக்குப் புதிய தலைவர்
பெங்களூர்:
கூடுதல் போலீஸ் டிஜிபி சாங்கிலியானா தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கும் என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் தெரிவித்தார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக, கர்நாடகஅரசுகள் கூட்டு அதிரடிப் படை மூலம் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. கூடுதல் போலீஸ் டிஜிபி சாங்கிலியானா தலைமையில் கூட்டுஅதிரடிப் படை தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கும். இந்தக் கூட்டு நடவடிக்கைக்கு மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும்நம்பிக்கை தெரிவித்தார் கிருஷ்ணா.
முன்னதாக, வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கர்நாடகத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மத்திய அரசின் கமாண்டோ படைகளை காட்டுக்கு அனுப்பி வீரப்பனைப் பிடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கனவே, திங்கள்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகையில், ஐஜி.பாலச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படைகாட்டுக்குள் புகுந்து வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கி விட்டதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் கர்நாடக அதிரடிப்படையின் தற்போதைய நிலையைமுதல்வர் கிருஷ்ணா தெளிவாக்கியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications