வீரப்பனைப் பிடிக்க செயற்கைக்கோள், நவீன ஆயுதங்கள்
டெல்லி:
வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருடன் தமிழகஅதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த அதிகாரிகள் மத்திய அமைச்சரும் தி.மு.க. தலைவர்களில் ஒருவருமான டி.ஆர்.பாலு தலைமையில் அத்வானியைச் சந்தித்தனர்.
அப்போது வீரப்பனைப் பிடிக்க என்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் மத்திய அரசு வழங்கும் என அத்வானி உறுதி அளித்தார். படைகள்,ஆயுதங்கள் எது வேண்டுமானாலும் தரத் தயார் என்றார்.
வியாழக்கிழமை டெல்லி சென்ற தமிழக தலைமைச் செயலாளர் முத்துசாமி, உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர், காவல்துறை டி.ஜி.பி. ராஜகோபாலன்ஆகியோர் அத்வானியையும், பெர்னாண்டசையும் சந்தித்துப் பேசினர்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படைக்கு நவீன ஆயுதங்களும், தகவல் தொடர்புக் கருவிகளும் வேண்டும் என அவர்கள் பெர்னாண்டசிடம் கேட்டுக்கொண்டனர்.
அதே போல செயற்கைக் கோளின் உதவியுடன் காட்டுப் பகுதியை படம் பிடித்து வீரப்பனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உதவ வேண்டும் எனமத்திய அரசிடம் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்தும் இந்தக் கோரிக்கைகைள வலியுறுத்த தமிழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதே போல கர்நாடக டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் ஆகியோரும் டெல்லியில் தான் முகாமிட்டுள்ளனர்.
கமாண்டோக்கள் வேண்டும்:
இந்நிலையில் வீரப்பனைப் பிடிக்க தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்களை அனுப்ப வேண்டும் எனக் கோரிபிரதமர் வாஜ்பாய், அமைச்சர் அத்வானிக்கு கர்நாடக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications