அதிரடிப்படையில் சேர தயக்கம் காட்டும் போலீசார்
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையில்சேருவதற்கு தயாரா எனக் கேட்டு பல்வேறு இடங்களில் உள்ள சிறப்புக் காவல் படைபோலீசாருக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகுவீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக அரசின் அதிரடிப்படை தீவிரமாகஇறங்கியிருக்கிறது. புதிய வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் அதிகமான அளவு போலீசாரை ஈடுபடுத்துவது எனமுடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருச்சி, கோவை, பழநி மற்றும் மணிமுத்தாறுபோன்ற இடங்களில் உள்ள சிறப்பு காவல்படை பட்டாலியனிலிருந்து போலீசார்வரவழைக்கப்ட்டிருக்கிறார்கள்.
பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்படிருக்கிறார்கள். வீரப்பனுக்கு உணவு அனுப்புவது மற்றும் அவனுக்கு தகவல்ஏதும் செல்ல முடியாதபடி மலையடிவாரத்திலும், மலையைச் சுற்றியும் காவல்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
காட்டில் வீரப்பனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் பணியில் பெருமளவுபட்டாலியன் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரப்பனை தேடும் பணியில் சிறப்புஅதிரடி போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணி புரிபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅதிரடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். அதிரடிப் படையில் போலீசாகர்எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.
இதில் சேர விருப்பம் இருப்பவர்கள் பெயர் கொடுக்குமாறு சிறப்பு போலீஸபட்டாலியன்களுக்கு அரசு சுற்றிக்கை அனுப்பியிருக்கிறது. ஒவ்வொருபட்டாலியனிலிருந்தும் 5 முதல் 10 போலீசார் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால்வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட போலீசார் பெரும்பாலானவர்கள்விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications