காந்தியை தவிர மற்ற தலைவர்கள் விழாக்களுக்குத் தடை
டெல்லி:
தேவையில்லாத செலவுகளைக் குறைக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
மத்திய அரசின் திட்டமில்லா செலவைகுறைப்பதற்காகவும், நிதிப்பற்றாக்கறையைைகுறைக்கவும் மத்திய அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது.
காந்தியடிகளின் பிறந்த நாள், நினைவு நாள் தவிர மற்ற தலைவர்கள் பிறந்தநாள்,நினைவு நாள் விழாவிற்கான செலவுகளை மத்திய அரசு இனிமேல் ஏற்காது எனஅறிவித்துள்ளது.
புதிய வாகனங்கள் கிடையாது:
அதே போல பல்வேறு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
தேவையற்ற புதிய பதவிகளை மாநில அரசுகள் ஏற்படுத்தினால் அதற்கு மத்திய அரசுஉதவி செய்யாது, மாநில அரசுகளே அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தைத் தவிர பிற அமைச்சகத்தவர்கள் வெளிநாடு செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறு சிறு விஷயங்களுக்காக மாநாடு, அரசு விழாக்கள் போன்றவைநடத்தப்படக்கூடாது என பல அதிரடி உத்தரவுகள் வந்த வண்ணமிருக்கதிஙகள்கிழமையன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா தேசிய தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் விழாக்கள் அரசின்செலவில் நடத்தப்பட மாட்டாது என தடை விதித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
டெல்லி உள்ள தேசத்தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் விழாக்கள் இனி அரசுசெலவில் கொண்டாடப்பட மாட்டாது. அவ்வாறு தலைவர்கள் சமாதியில்கொண்டாடப்படும் விழாக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யாது,
காந்தி ஜெயந்தி விழாவுக்கும், அவரது நினைவு நாள் விழாவுக்கும் ராஜ்காட்டில் காந்திசமாதி கமிட்டி பொறுப்பேற்றுக் கொள்ளும். அரசின் நிதிப்பற்றாக்குறையைகுறைக்கவும், தலைவர்களின் பாதுகாப்பு செலவை குறைக்கவும் இந்த நடவடிக்கைஎடுக்கபடுகிறது என அவர் கூறியுள்ளார்.
இதன் படி இனிஇதுவரை அரசு செலவில் நடந்து வந்த நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிறந்த நாள், நினைவு நாள் விழாக்கள் இனி அரசு செலவில்நடக்காது.
இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications