தற்கொலை செய்த விளையாட்டு வீரருக்கு ஜெ. உதவி
சென்னை:
வேலை கிடைக்காததால் வாழக்கையில் கஷ்டப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர் ஜெயவேல் குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர்.அறக்கட்டளையிலிருந்து ரூ 1 லட்சம் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவரும், விளையாட்டு வீரருமான ஜெயக்குமார் வேலை கிடைக்காததனால் வாழ்வில் கஷ்டப்பட்டு வந்தார். மனவருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அவருக்கு ஜெயலலிதா உதவுவதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னனையில்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவிலும், மாலத்தீவிலும் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடிய இளம் வீரர், பட்டதாரியாக இருந்தும் வேலைகிடைக்காமல் நொந்து தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தமிழக அரசுத் துறையில் வேலை வாய்ப்பு அளிக்காதகருணாநிதிதான் இந்த இளைஞர் ஜெயவேல் சாவிற்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் விளையாட்டுத் துறையில் உள்ள திறமை அடிப்படையில் வேலை தேடி இந்தியா முழுதும்அலையும் அவலமான நிலை உள்ளது.
வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பல்கலை கழக விளையாட்டு வீரராகவும், இளநிலை தேசிய விளையாட்டு வீரராகவும் விளங்கிய லயோலா கல்லூரி மாணவர் ஜெயவேல் தற்கொலைசெய்து கொண்டு இறந்தது இதற்கு சான்று.
மறைந்த விளையாட்டு வீரரின் குடும்பத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அறக் கட்டளையிலிருந்து ரூ 1 லட்சம் வழங்கப்படும். மேலும் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் பெண்மணியான, தமிழ்நாட்டின் ஜெயலட்சுமிக்கும் ரூ 1 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications