இந்தியா-பாகிஸ்தான் ரயிலுக்கு காத்திருந்த பயணி குளிரில் நடுங்கி சாவு
அடாரி:
இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் ரயில் பாதுகாப்பு காரணங்குக்காக இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இந்த ரயில் வரும் என்று இரவு முழுவதும் திறந்த வெளி ரயில் நிலையத்தில் காத்திருந்த முதியவர் கடும் குளிர் காரணமாக இறந்துபோனார். இந்த சம்பவம் இந்தியாவின் எல்லைப் பகுதி ரயில் நிலையமான அட்டாரியில் நடந்தது.
திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. முகமது சுமீர் (61) என்பவர் பாகிஸ்தானின் மிர்புரைச் சேர்ந்தவர். இவர்லாகூருக்குச் செல்லும் சாம்ஜவ்தா ரயிலுக்காக காத்திருந்தார். இவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலுக்காககாத்திருந்தனர்.
ஆனால் இந்த ரயில் பாதுகாப்பு காரணங்களால் அடாரி ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்வில்லை. கடும் குளிரைத்தாங்கமுடியாமல் சுமீர் இறந்து போனார்.
அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர் குளிர் காரணமாகஇறந்தததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
அமிர்தசரசில் இருக்கும் எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவிக்கையில், எல்லை பாதுகாப்பு படையினர்தான்ரயில்பாதையிைன் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியில் இருக்கிறார்கள்.. எலலை பாதுகாப்புப் படைக்கு மாலை 6 மணிக்குமேல் வரும் ரயில்களை தடுத்து நிறுத்தும் உரிமை உண்டு
லாகூரிலிருந்து வரும் சம்ஜவ்தா ரயில் நண்பகல் 12 மணிக்கு அடாரி ரயில் நிலயைம் வர வேண்டியது. அது 6 மணி நேரம்தாமதமாக மாலை 6 மணிக்கு வந்தது. அதனால் பாதுகாப்பு காரணங்களால் அந்த ரயிலை அனுமதிக்கவில்லை.
இரவு நேரத்தில் ரயில்வே கேட்டை திறப்பதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் பாதுகாப்புகாரணங்களால் திங்கள் கிழமையன்று மறுக்கப்பட்டது என கூறினார்
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications