ரேடியோ, டிவி தனியார்மயமாகாது
டெல்லி:
ரேடியோ, டிவி தனியார் மயமாகாது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி மேல்சபையில்திங்கள்கிழமை உறுதியளித்தார்.
டெல்லி மேல் சபையில் கேள்வி நேரத்தின் போது, ரேடியோ, டிவி தனியார் மயமாக்கப்படுமா என்ற கேள்விஎழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:
டெலிவிஷன், ரேடியோ இலாகாக்கள் உலக அளவில் தொடர்புகள் உள்ளவை ஆகும். இந்த இலாகாக்களைதனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை.
ஆனால் அதே நேரம் ஆல் இன்டியா ரேடியோ செயல்பாட்டை நவீனப்படுத்தும் முயற்சிகளை பிரச்சார் பாரதிமேற்கொள்ளும்.
இதோபோல் டெலிவினில் நவீன தொழில்நுட்பத்தையும், புதிய, புதிய நிகழ்ச்சிகளையும் உருவாக்கிபார்வையாளர்களைக் கவர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
டெலிவிஷன் நிலையம், சென்னை, டெல்லி, மும்பை, கல்கத்தா ஆகிய 4 பெருநகரங்களிலும் வரும் 2001 ம்ஆண்டு முதல் பரிசோதனை முறையில் டிஜிட்டல் மூலமாக தரைவழி ஒளிபரப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுஎன்றார் சுஷ்மா சுவராஜ்.












Click it and Unblock the Notifications