முகாமுக்குத் திரும்பினர் அதிரடிப்படையினர்
ஈரோடு:
வீரப்பனைத் தேடிச் சென்ற அதிரடிப்படையினர் பயிற்சிக்காக முகாமிற்குத் திரும்பியுள்ளனர். அதே சமயம், உளவுப் படையினர் காட்டுக்குள் ஊடுருவியுள்ளனர்.
வீரப்பனைத் தேடி அதிரடிப்படை முழுமூச்சுடன் காட்டுக்குள் களமிறங்கியது. இந்த படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டாலும், அதில்பல்வேறு முட்டுக் கட்டைகள் ஏற்பட்டன.
குறிப்பாக மாயமாக மறையும் வீரப்பன் இருக்கும் இடம் எது என்று அவர்களால் சரியாக யூகிக்க முடியவில்லை. எனவே, வீணாகமலையேற்றத்தையும், காட்டுக்குள் அலைவதையும் தவிர்க்கும் பொருட்டு அதிரடிப்படையினர் முகாமிற்குத் திரும்பியுள்ளனர்.
காட்டுப் பகுதியில் போதுமான இன்பார்மர்கள் இல்லாமல் போனதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்பார்மர்களை தேடிஉளவுப் பிரிவினரும் காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
ராஜ்குமாரை விடுதலை செய்த பிறகு வீரப்பன் கும்பல் எங்கு சென்றனர் என்பதற்கான தடயம் கூட இந்த முறை கிடைக்கவில்லை.
வீரப்பன், அவனுடன் இருக்கும் தீவிரவாதக் கும்பல் ஆகியவை தங்கள் சென்ற பாதையில் சிறு தடயங்களைக் கூட விட்டு வைக்காமல் மறைந்துவிட்டனர்.
இவர்கள் மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதியாகவும், செங்குத்தான இடமாகவும் உள்ள குன்றிமலைப் பகுதிகளில் வீரப்பன் பதுங்கியிருக்கலாம் என்ற யூகத்தின்அடிப்படையில் இந்த மலைப் பகுதியை அதிரடிப்படை ஊடுருவியது. ஆனால் அங்கு வீரப்பன் தங்கியிருப்பதற்கான ஆதரப்பூர்வமான தகவல்கள் எதுவும் அதிரடிப்படையினருக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மலைப் பகுதியில் வாழும் மக்களிடம் வீரப்பன் பதுங்கியுள்ள இடம் குறித்து அதிரடிப்படையினர் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகின்றனர். இக்கிராம மக்கள் வீரப்பனைப் பற்றிய தகவல்களை அளிக்க முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து காட்டுக்குள் இருந்த அதிரடிப்படையினர் முகாமிற்குத் திரும்பி அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீரப்பன் பதுங்கியுள்ள இடத்தை அறிய உளவுப் பிரிவினர் காட்டுக்குள் சென்றுள்ளனர். வீரப்பனுக்கு உணவு செல்லும் பாதை, அவனுக்குத் தகவல்கொடுக்கும் இன்பார்மர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களை இவர்கள் சேகரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications