தேசிய கொடியை அவமதித்த 3 பேர் மீது வழக்கு
ஈரோடு:
தேசியக் கொடியை அவமதித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் கருங்கல் பாளையத்தில் நவம்பர் 27ம் தேதி அளித்துள்ள புகாரில்கூறியதாவது:
கடந்த சுதந்திர தினத்தன்று கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தன்றுபேரூராட்சித் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கொடியேற்றினர்.
பின்னர் அலுவலகத்தைப் பூட்டி விட்டுச் சென்று விட்டனர். ஆனால், மீண்டும் 6 மணிக்கு தேசிய விதிமுறைப்படி இறக்க வில்லை.
எனவே, இதையடுத்து மழை பெய்தது. இந்த மழையில் தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. மேலும், இரவு 7. 45 மணிக்குத் தான் தேசியக் கொடியைஊழியர்கள் இறக்கினர்.
இது தேசியக் கொடிக்குச் செய்த அவ மரியாதையாகும். எனவே தேசியக் கொடியை அவமதித்த பேரூராட்சித் தலைவர், செயலர் மற்றும் ஊழியர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications