இலங்கையில் வேகமாகப் பரவுகிறது எய்ட்ஸ்
கொழும்பு:
இலங்கையில் இனப் பிரச்சனையை விட, பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு விஷயம் எய்ட்ஸ் என்று சமீபத்திய ஆய்வுகள்தெரிவிக்கின்றன.
இலங்கையில் எய்டஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உயர் அதிகாரி டி ரோஸ் கூறுகையில், இலங்கையில் தற்போது எய்ட்ஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பது இலங்கை அரசு மற்றும் பிரச்சாரக் குழுக்களின் கையில் உள்ளது.
எய்ட்ஸ் நோய் மிக வேகமாப் பரவி வருகிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வறிக்கைஎங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? எய்ட்ஸ் நோய்பரவாமல் தடுப்பது எப்படி என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.
இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் போரை விட எய்ட்ஸ் நோய் மிகவும் அபாயகரமானது.எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புக்கள் அதிகஈடுபாடு காட்டுகின்றன.
இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வரும் இனக்கலவரத்தில் இதுவரை இரு தரப்பிலும்சேர்த்து 60, 000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இலங்கையிலும், இந்தியாவிலும்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது போரை விட மிகவும் அபாயகரமானதாக எய்ட்ஸ் நோய் பரவி வருவது வருத்தமளிக்கிறது.
யு என் எய்ட்ஸ் என்ற அமைப்பினர், இலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீரர் சனத் ஜெயசூரியாவைக் கொண்டு,எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தினார்கள். இது பாராட்டத்தக்கது. ஆனால் அவர்கள்இதை 10 வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும், கமலிகா அபாய்ரத்னே கூறுகையில், டிசம்பர் 1 ம் தேதிஎய்ட்ஸ் ஒழிப்பு தினம் ஆகும். அதற்கு முன் எதிர்காலத்தில் இந்நோயின் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாத வகையில்பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.
2005 க்குள் 80, 000 பேருக்கு எச்ஐவி:
முன்னதாக, இலங்கையில் முதல்முதலாக 1986 ம் வருடம் எச்.ஐ.வி.கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அதற்குப் பின் 300 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், யுஎன் எய்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இலங்கையில் 8,000 பேர் எச்.ஐ.வி.நோய்க்கிருமியால் தாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுப்படி, 2005 ம் வருடத்திற்குள், இலங்கையில் 80, 000 க்கும் மேற்பட்டோரைஎய்ட்ஸ் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
