தாக்கரேக்கு காஷ்மீர் தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை:
சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரேவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், மும்பை நகரில் ஊடுருவியுள்ள காஷ்மீர் தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல்வந்துள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தாக்கரேக்கு காஷ்மீர் தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாகபாகிஸ்தான் ஆதரவு லஸ்கார்- ஈ- தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தாக்கரேயை மிகவும்ஜாக்கிரதையாக இருக்கும் படி கூறியுள்ளோம்.
பிரச்சனை ஏற்படாதவாறு தடுக்கும் விதத்தில் வீட்டை விட்டு வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ சுற்றுப் பயணமோ செல்ல வேண்டாம் என்றும்அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.
முன்னதாக, மத்திய உளவுத்துயிைனர், மும்பை, தானே, நாவி, நாசிக் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று மகாராஷ்டிர அரசைகேட்டுக் கொண்டுள்ளனர்.
தானே நகரில் தீவிரவாதிகள்:
மும்பை நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தானே நகரில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த லஸ்கார் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர்.அவர்களை விசாரித்ததில் அவர்கள் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தைத் தகர்க்கத் திட்டமிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
முன்னதாக, மும்பையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது நடந்த தாக்குதலில் லஸ்கார் ஈ தொய்பா அமைப்பின் முன்னணி தலைவர் அபு சபியுல்லா என்ற ஹம்சாஅலி என்பவர் காயமடைந்தார்.
அப்போது மேலும் சில தீவிரவாதிகளைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது.
தாக்கரே வீட்டைத் தகர்க்கத் திட்டம்:
சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரேயின் வீட்டைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதும் போலீஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவரைப் பாதுகாப்பாக இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மாலைகளுடனும், பூங்கொத்துக்களுடனும் வருபவர்கள்யாரையும் பார்க்க வேண்டாம்.
நன்கு அறிமுகமானவர்களை மட்டும் சந்தித்தால் போதுமானது. வெளியில் எங்கேயாவது செல்லத் திட்டமிட்டிருந்தால் அதை உடனடியாக பக்கத்திலுள்ளபோலீஸ் கமிஷனருக்கு விவரம் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் தாக்கரேயிடம் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications