சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்குத் தூக்கு
திண்டுக்கல்:
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த காமக்கொடூரனுக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் சின்ன அய்யன்குளத்தை சேர்ந்தவர் வடிவேல். இரும்பு வியாபாரி. இவரது மகள் ரேவதி வயது ஆறு. இதே பகுதியைச்சேர்ந்தவர் தங்கபாண்டியன் ( வயது 21)
1998-ம் வருடம் டிசம்பர் மாதம் 28 - ம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ரேவதியை தூக்கிச் சென்று வாயில் துணியைஅடைத்து கற்பழித்தார் தங்கபாண்டியன். பெல்ட், டெலிபோன் வயர் போன்றவற்றால் ரேவதி கழுத்தை நெறித்து கொலையும்செய்தார்.
ரேவதியின் பிணத்தை கட்டி, அட்டைப்பெட்டியில் வைத்தார். பெட்டியினுள்ளேயே கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட்,டெலிபோன் வயர், கைலி, கருப்பு பேண்ட் போன்றவற்றை சுற்றி வைத்தார்.
இவற்றை அப்பகுதியில் உள்ள தனியார் மில் பின்புறம் உள்ள முட்புதரில் வீசி எறிந்தார்.
இதையடுத்து ரேவதியின் பெற்றோர்கள் குழந்தையை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போலீஸில் புகார்செய்தனர். டிசம்பர் மாதம் 29-ம் தேதி ரேவதியின் பிணத்தை போலீஸார் கைப்பற்றினர். தங்க பாண்டியனை கைது செய்தனர்.
ஆபாசப் படங்களைப் பார்த்துத்தான் கற்பழிப்பையும், கொலையையும் செய்ததாக வாக்குமூலம் கொடுத்தான் தங்கபாண்டியன்.
தங்கபாண்டியன் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மாவட்ட நீதிபதி மதிவாணன் விசாரணைநடத்தினார். சிறுமியை கொலை செய்தற்கு தூக்கு தண்டனையும், கற்பழித்தற்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனையும்,சாட்சியங்களை மறைத்தற்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
முன்னதாக சிறையில் இருந்த தங்கப்பாண்டியன் ஜாமீனில் வெளியே வந்தபொழுது பாரதிபுரத்தைச்சேர்ந்த மாரியம்மாளைதிருமணம் செய்து கொண்டார். தற்பொழுது மாரியம்மாள் நிறை மாதக் கர்ப்பிணியாக உள்ளார்.
இந் நிலையில் தான் தங்கப்பாண்டியனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications