இலங்கையில் 2 நாட்கள் போர்நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடுவதால் யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது.
இந்தப் போரில் இரு தரப்பிலும் 63, 000 பேர் பலியாகி உள்ளனர். போர் நடைபெறும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ளகுழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போட யூனிசெப் நிறுவனம் முன்வந்துள்ளது.
குழந்தைகளுக்கு வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் போலியோ தடுப்பு ஊசி போடப்படும்.
போர் நிறுத்தம்:
இதற்காக இலங்கை வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பகுதிகளில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய இலங்கை ராணுவமும்,விடுதலைப்புலிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications