தமிழகப் புயலில் சிக்கி 6 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் புயலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
புயலால் நெற்பயிற்கள் நாசமடைந்தன. பல மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சரிந்தன.
தஞ்சாவூரிலிருந்து கிடைத்த செய்திகளின் படி, இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் முறையே நாகப்பட்டினம் மற்றும்திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி:
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் முதிய பெண் ஒருவர் இறந்தார்.
சீர்காழி, பாபநாசம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திருவாரூரில் 3 பேர் பலி:
திருவாரூர் மாவட்டம் பனயம்சேரி பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
மூன்று மாவட்டங்கள் கடும் பாதிப்பு:
தமிழகம்-ஆந்திரப் பிரதேசம் இடையே கடலூர் அருகே புதன்கிழமை கரையைக் கடந்த கடும் புயலால் கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களும், பாண்டிச்சேரி மாநிலமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னை அருகே வங்கக் கடலில் உருவான புயல் புதன்கிழமை பிற்பகல் கரையைக் கடந்தது.
சூறாவளி:
இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தது. கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பக்கத்தில்ஞானசேகரன் (32) என்பவர் உள்பட 8 பேர் மரங்கள் விழந்ததில் காயமடைந்தனர்.
1000 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் கூரைகளும், ஓடுகளும் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
புதுவையில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய போதும் கன மழை இல்லை. பல இடங்களில் மிதமானமற்றும் பலத்த மழை தான் இருந்தது.
போக்குவரத்து பாதிப்பு:
சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து கிடப்பதால் கடலூரில் இருந்து சிதம்பரம், புதுவை, விருத்தாசலம் உள்படபல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குள்ளச்சாவடி-வடலூர் பகுதியில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் - கடலூர் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து, கடலூர் வழியாக சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்குவந்தது.
அது அங்கிருந்து புறப்பட்ட போது, வரகால்பட்டு ரயில் நிலையப் பாதையில் ஏராளமான மரங்கள் தண்டவாளத்தில்விழுந்து கிடந்தன. அதனால் 2 கி.மீ.வேகத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்வதற்காக வருவாய்த்துறை, காவல்துறை,தீயணைப்புத் துறையினர் நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊருக்குள் கடல்நீர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் நீர் புகுந்தது. மரக்காணம் அருகே 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர்புகுந்தது. அப்பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீனவர்களைக் காணவில்லை:
கடலூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்களின் கதி என்ன என்றுதெரியவில்லை.
வியாழனும் விடுமுறை:
புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் வியாழக்கிழமையும் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பள்ளிகளுக்கு வியாழக்கிழமையும்விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவையில் சேதம்:
புயல் காரணமாக புதுவையில் சூறாவளிக் காற்று வீசியது. சில இடங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.இச்சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சூறாவளிக் காற்றால் புதுவை மற்றும் கிராமப்பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. துணைநிலைஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பாரதி பூங்கா, தலைமை அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள்சாய்ந்தன.
செயலிழந்த தொலைபேசிகள்:
புதுவையில் பலத்த சூறாவளிக் காற்றினால் தொலைபேசி இணைப்புக்கள் செயலிழந்தன. சாலையில் மரங்கள்விழுந்து கிடப்பதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுவையில் பலத்த மழைபெய்யவில்லை. இருப்பினும் கடும் சூறாவளிக் காற்று வீசியது.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications