சிங்கப்பூர் உதவியுடன் பெங்களூரில் இன்னொரு ஐ.டி பார்க்
பெங்களூர்:
சாப்ட்வேர் மற்றும் உயிரித் தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) துறைகளில் மேலும் இணைந்து செயல்படசிங்கப்பூரும் இந்தியாவும் திட்டமிட்டுள்ளன.
பெங்களூரில் இரண்டாவது இன்டர்நேசனல் டெக்னாலஜி பார்க் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில்நடந்தது. சுமார் 35 மில்லியன் டாலர் செலவில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் ஜார்ஜ் யூ, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாஆகியோர் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் அடங்கிய குழுமமும் டாடா நிறுவனமும் இணைந்து தான் இந்த ஹைடெக்பூங்காவை அமைக்கின்றன. ஏற்கனவே, இந்த நிறுவனங்கள் இணைந்து பெங்களூரில் ஹைடெக் பார்க்கைஉருவாக்கியுள்ளன. இப்போது இரண்டாவது பூங்காவை உருவாக்க உள்ளன.
1.2 மில்லியன் சதுர அடிப் பரப்பில் கட்டப்பட உள்ள இந்த பூங்கா 12 முதல் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.












Click it and Unblock the Notifications