மில்லினியத்தின் மிஸ் வேர்ல்டு பிரியங்கா
லண்டன்:
மில்லினியம் வருடத்தின் மிஸ் வேர்ல்டாக இந்திய அழகி பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லண்டனில் வியாழக்கிழமை இரவு உலக அழகிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பெமினா மிஸ் இந்தியா ப்ரியங்காசோப்ரா உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தாலியைச் சேர்ந்த அழகி இரண்டாவது இடத்தையும், துருக்கியைச் சேர்ந்த அழகி மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
பிரியங்கா உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்களின் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
அன்னை தெரசா போல்...:
மிஸ் வேர்ல்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கூறுகையில், அன்னை தெரசா போல் வெற்றிகரமான பெண்ணாக வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் இந்தியாவில் பிறந்ததால்தான் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஏனெனில் நம் இந்தியகலாச்சாரமும், பண்பாடும் என் மனதில் ஊறிக் கிடக்கிறது.
மிஸ் வேர்ல்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மிகவும் சந்தோஷமடைகிறேன். வானில் பரப்பது போல் மிகவும் பரவசமாக உள்ளது என்றார்.
முன்னதாக 1999 ம் வருடம் மிஸ் வேர்ல்டாக யுக்தா முகி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் இந்திய அழகியே. இத்துடன் இந்தியா இரண்டு வருடங்கள் மிஸ்வேர்ல்டு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications