ஜாதகத்தால் பிரிந்த காதல் ஜோடி தற்கொலை
சூலூர்:
காதலுக்கு ஜாதி தடை விதிக்கவில்லை. பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விதியும் அவர்களைப்பிரிக்கவில்லை. ஆனால் ஜாதகம், ஜோதிடம் இருவரையும் இந்த உலகை விட்டே அனுப்பி விட்டது.
பெரும்பாலான காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வது, பெற்றோர்களின் எதிர்ப்பால் தான். ஆனால்கோவையில் ஒரு காதல் ஜோடியை ஜோதிடம் இந்தப் புவியை விட்டே அனுப்பி விட்டது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்களைச் சேர்ந்தவர் கந்தசாமி (25). அதே தெருவில் வசித்து வந்தமாறனின் மனைவி லட்சுமி (19). இவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும்இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். இருவரும் ஒரே ஜாதி என்பதால் ஜாதியும் தடை விதிக்கவில்லை. அதேசமயம், பெற்றோர்களும் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
எனவே திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்க இரு தரப்பு பெற்றோர்களும் ஒப்புக் கொண்டனர். எனவேஇருவரது ஜாதகத்தையும் எடுத்துச் சென்று ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் சென்றனர். ஜோதிடர், இருவருக்கும்பொருத்தம் சரியில்லை. ஒருவரை ஒருவர் மறந்து விடுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இதனால் மனம் உடைந்த இருவரும் திடீரென காணமல் போயினர். இவர்களைத் தேடி பெற்றோர்கள் பலஇடங்களில் அலைந்தனர். ஆனால் இருவரும் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதுதெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications