பேச்சு வார்த்தைக்குத் தயாராகிறது இலங்கை அரசு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உறுதியாக இருந்தால் அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இலங்கை பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ள செய்திகள் குறித்த விவரம் வருமாறு:
இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்தப்போரில் தினமும் இரு தரப்பிலும் பலர் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
இப் பிரச்சனைக்குத் தீர்வு காண நார்வே சமரசக் குழு முழுவீச்சில் இறங்கியுள்ளது. அது மூன்றாவது நாடாக பிரபாகரனுடன் தூது சென்று அவரது கருத்தைத்தெரிந்து கொண்டது. அதே போல் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக உள்ளதை இலங்கை அரசிடம்தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழ் செய்தித்தளம் ஒன்றில் பிரபாகரன், பேச்சுவார்த்தைக்கு முன்பு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனால்நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குப் பிரபாகரன் தயாராக இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து தெளிவான கருத்துக்கள் எதுவும் இல்லை.
விடுதலைப் புலிகள் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குத் தயாராகவும், இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண நிஜமாகவே ஆர்வம் காட்டுவதாகவும்இருந்தால், அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நார்வே தூதுக்குழு - பிரபாகரன் சந்திப்பு:
முன்னதாகக் கடந்த நவம்பர் 1 ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்மும் நேரடியாகச் சந்தித்துப்பேசினர். அவர்கள் இலங்கை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் அறிவிப்பு:
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதில் நிஜமாகவே ஆர்வம் காட்டினால் இலங்கை அரசு அமைதிப்பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்களில் ஈடுபடும். இதில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஈடுபடும்என்று தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications