சென்னையில் காலையிலேயே இறங்கிய அமலாக்கத்துறை.. தொழிலதிபர் வீடு உள்பட 3 இடங்களில் திடீர் சோதனை
சென்னை: சென்னையில் திருவொற்றியூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சிஆர்பிஎப் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவொற்றியூரில் உள்ள தொழிலதிபர் முருகேசன் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள ஓய்வு பெற்ற ஆர்டிஓ வீட்டிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் முருகேசன் டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார். இதுபோக மேலும் சில இடங்களில் சோதனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம் என்று தெரிகிறது. எந்த வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இன்று காலை முதலே சென்னையில் நடைபெற்று வரும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
