தேனியில் ரியல் லக்கி பாஸ்கர்.. சின்ன கிராமத்து தேசிய வங்கியில் 11.50 கோடி சம்பாதித்த வங்கி மேலாளர்

Subscribe to Oneindia Tamil

தேனி: லக்கி பாஸ்கர் படம் பாணியில் தேசிய வங்கியில் வேலை செய்த நபர் 11.50 கோடி ஏமாற்றி சம்பாதித்துள்ளார். இந்த சம்பவம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் நடந்துள்ளது. போலியான நகைக்கடன் வழங்கி ரூ.11.5 கோடி கையாடல் செய்த கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் தப்பிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள கிராமம் ஓடைப்பட்டி. இந்த கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கிளையில் சின்னமனூர் ஆர்.சி. தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 29.5.2023 முதல் 20.5.2026 வரை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவர் கூழையனூரில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. உடைப்பட்டி கிளை புதிய மேலாளராக உன்னிகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

Lucky Bhaskar in Theni Bank manager swindles 11 50 crore from a rural nationalized bank

பின்னர் அந்த கிளையில் வழங்கப்பட்ட நகைக்கடன் கணக்குகளை பார்வையிட்டார். அப்போது உதயகுமார் என்பவரின் பெயரில் 110 கிராம் நகையை அடகு வைத்து ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் கடன் பெறப்பட்டிருந்தது. அதற்கான நகையை வங்கி லாக்கரில் பரிசோதித்த போது, அங்கு நகைகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதையடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தேனி மண்டல துணைப் பொதுமேலாளர் இந்திரா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஓடைப்பட்டி கிளையில் ஆய்வு செய்தனர். கார்த்திக் பணியாற்றிய கால கட்டத்தில் வழங்கிய நகைக்கடன் விவரங்களை முழுமையாக தணிக்கை செய்தார்கள். அப்போது 46 வாடிக்கையாளர்களின் பெயரில் 114 போலியான நகைக்கடன் வழங்கப்பட்டு, ரூ.9 கோடியே 64 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பணத்தை வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் செலுத்தி பின்னர் அதை தனது பெயரில் உள்ள வேறு 2 வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் குழுவினர், கூழையனூர் கிளையிலும் ஆய்வு செய்தார்கள். அங்கும் அதேபோல் 14 வாடிக்கையாளர்களின் பெயரில் 18 போலியான கடன்களை உருவாக்கி ரூ.1 கோடியே 99 லட்சத்து 88 ஆயிரம் கையாடல் செய்திருப்பதையும் கண்டுபிடித்தார்கள். குறிப்பிட்ட தேசிய வங்கியின் 2 கிளைகளிலும் மேலாளர் கார்த்திக், மொத்தம் ரூ.11 கோடியே 63 லட்சத்து 88 ஆயிரம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வங்கி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் மேலாளர் கார்த்திக் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' என்ற படத்தில் எப்படி வங்கி அதிகாரியாக நடித்த துல்கர் சல்மான் வங்கி பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று சொந்த தேவைக்கு பயன்படுத்துவார். அதுபோல் தான் பயன்படுத்தி உள்ளார். ஆனால் லக்கி பாஸ்கர் படத்தில் வங்கியில் வரவு வைக்கப்பட வேண்டிய பணத்தை மீண்டும் வரவு வைத்துவிடுவார். ஆனால் இவர் போலியான நகையை அடகுவைத்து அப்படியே தன் வங்கி கணககில் மாற்றிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+