நாடு கடத்தப்பட்டார் நவாஸ் ஷெரீப்: சவுதியில் தஞ்சம்
இஸ்லாமாபாத்:
அரசியல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில்தஞ்சம் புகுந்தார்.
நவாஸ் ஷெரீபின் ஆட்சியைக் கவிழ்த்த பாகிஸ்தானின் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப், அவரை சிறையில் அடைத்தார்.
சிறையில் இருந்த வந்த ஷெரீபுக்கு அடைக்கலம் தர சவுதி அரேபிய மன்னர் முன் வந்தார். இதையடுத்து அவருக்கு பொதுமன்னிப்பு அளித்த முஷாரப் அவரை விடுவித்தார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது மனைவி, மகன், குடும்பத்தினர் உள்பட 18 பேருடன் ஷெரீப் சவுதிக்கு தனிவிமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இந்த விமானத்தையும் சவுதி அரசு தான் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 10 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தங்கியிருக்க அந்நாடு அனுமதித்துள்ளது. சிறைச்சாலையில் இருந்து நேராக விமானநிலையம் கொண்டு வரப்பட்ட அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். அவரது குடும்பத்தினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் அந்த விமானம் நேராக ரியாத் சென்றடைந்தது. விமானத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் அங்குள்ள மருத்துவனையில்ஷெரீப் அனுமதிக்கப்பட்டார்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்கூறியுள்ளார். பாகிஸ்தானின் நண்பனான சவுதி அரேபியா, ஷெரீபை நாடு கடத்தினால் ஏற்றுக் கொள்வதாக கூறியது.இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாகிஸ்தானின் அரசு அறிக்கை கூறுகிறது.
சவுதியின் உதவி:
சவுதி மன்னர் குடும்பத்தினருக்கு ஷெரீப் மிக நெருக்கமானவராகவே இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு தூக்குதண்டைன கிடைத்துவிடாமல் கூட சவுதி அரேபியா பாகிஸ்தானின் நீதிமன்றத்தைத் தடுத்தது. இப்போது அவருக்குஅடைக்கலமும் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அங்கீகரித்துள்ள ஒரு சில நாடுகளில் சவுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.பதவியேற்றவுடன் முஷாரப் பயணம் செய்த முதல் நாடும் சவுதி தான்.
ஷெரீபை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரை சவுதி நிர்பந்தித்து வந்தது. இப்போது இந்த நிர்பந்தத்துக்குமுஷாரப் பணிந்துள்ளார்.
ஷெரீபுடன் சென்றவர்கள்:
ஷெரீபுடன், அவரது மனைவி குல்சும், தவிர தந்தை மியான் ஷெரீப், சகோதரர்கள் ஷாபாஸ், அப்பாஸ், மகன் ஹூசைன், மருமகன்கேப்டன் சப்தார் ஆகியோர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் பாகிஸ்தானைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
ஷெரீப் மனைவி விளக்கம்:
குல்சும் நவாஸ் விமான நிலையத்தில் பேசுகையில், இந்த இருட்டில் நாங்கள் தப்பி ஓடுவதாக நினைக்க வேண்டாம். நாங்கள்இங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இறைவன் அந்த இடத்துக்கு (சவுதி) எங்களைஅழைக்கிறான். இதற்காக இறைவனுக்கு நன்றி என்றார்.
சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷெரீபின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. அவருக்கு 5 லட்சம் டாலர்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் திரும்புமா?
பாகிஸ்தானில் பல கட்சிகள் கொண்ட தேசிய அரசை அமைக்க முஷாரப் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாகநவாஸ் கட்சியை முதலில் ஒழித்துக் கட்டிவிடும் திட்டத்துடன் தான் அவரை நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் தனது பாக்ஸிதான் முஸ்லீம் கட்சியின் செயல் தலைவராக ஜாவேத் ஹஸ்மியை நவாஸ் ஷெரீப்நியமித்திருக்கிறார். ஷெரீப் இல்லாவிட்டால், முஸ்லீம் லீக்கும் இல்லை என்று அர்த்தமாகாது என அக் கட்சியின் தலைவர்கள்கூறுகின்றனர்.
கடந்த 14 மாதங்களாக ஷெரீப் சிறையில் இருந்து வந்தார்.
ஷெரீபுக்கு விடுதலை அளிக்கப்பட்டது குறித்து சனிக்கிழமை நள்ளிரவில் தான் அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை சவுதிமன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சிறப்பு விமானத்தில் பாகிஸ்தான் வந்தார். முஷாரப் மற்றும் அதிகாரிகளுடன் ஷெரீப்விடுதலை குறித்து விவாதித்தார்.
பின்னர் ஷெரீபின் மனைவி குல்சும் பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் சென்று மன்னர் குடும்ப உறுப்பினருடன்பேசினார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஷெரீப் நாடு கடத்தப்படுவதாக அரசு அறிவித்தது.
ஷெரீப் பாகிஸ்தானைவிட்டு செல்வது குறித்து அறிந்த பெரும் திரளான அவரது கட்சியின் தொண்டர்கள் அந்த விமானப் படைவிமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஷெரீப் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்குள் நுழைய முடியாது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications