என் ஏரியாவிற்கு நான்தான் செய்வேன்! விஜய்யின் பெரம்பூர் 2.0 பிளான்! துபாய் ஸ்டைல்! அடியோடு மாறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தனது பெரம்பூர் சட்டசபை தொகுதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மிகப்பெரிய திட்டங்களை வகுத்துள்ளாராம். இதற்காக வேகமாக சில திட்டங்களை நிறைவேற்றவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

விஜய்யின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நீண்டகால நகரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் சென்னை மாநகராட்சி (GCC) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கென ரூபாய் 48 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான புதிய டெண்டரை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பிளான்

பெரம்பூர் தொகுதியின் கீழ் வரும் வியாசர்பாடி, எம்.கே.பி நகர், கொடுங்கையூர் போன்ற பகுதிகள் நீண்டகாலமாகப் பல்வேறு உள்கட்டமைப்பு சவால்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மழைக்கால வெள்ளம், குறுகிய சாலைகள், மோசமான நடைபாதை வசதிகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர்.

Vijay plan massive development for his Perambur Constituency GCC Greenlights Mega Action Plan

இவற்றுடன் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு, கழிவுநீர் தேங்கும் கேப்டன் காட்டன் கால்வாய் போன்ற பெரிய பிரச்சினைகளும் இப்பகுதியில் உள்ளன.

பெரம்பூர் சாலை பிரச்சனை

இந்தச் சூழலை முற்றிலுமாக மாற்றி, பெரம்பூரை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தத் தொகுதியில், பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

முதற்கட்டமாக 20 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

முன்பெல்லாம் சாலை போடுவது ஒரு முறையும், மழைநீர் வடிகால் அமைப்பது மற்றொரு முறையும் எனத் தனித்தனியாகவும் வெவ்வேறு காலகட்டங்களிலும் நடக்கும். ஆனால், இந்த முறை சென்னை மாநகராட்சி முற்றிலும் புதிய உத்தியைக் கையாண்டுள்ளது.

பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் வடிகால் சுத்தம் செய்தல், சாலைகளை அகலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் என அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய திட்டம்

இந்த மெகா திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு மற்றும் அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகள் அகற்றம், தொடர்ச்சியான அகலமான நடைபாதைகள், பிரத்யேக மிதிவண்டிப் பாதைகள் , முறையான வாகன நிறுத்த வசதிகள் மற்றும் நவீன தெருவிளக்குகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

மேலும், புதிய பூங்காக்கள், எல்லோருக்கும் குடிநீர் விநியோகம் மற்றும் முக்கியமாக பருவமழை வெள்ளத்தைத் தாங்கும் வகையிலான அதிநவீன வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைக் குழுவில் சிவில், போக்குவரத்து மற்றும் வடிவமைப்புத் துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் இடம் பெறவுள்ளனர்.

அவர்கள் ஜிஐஎஸ் கணக்கெடுப்பு மற்றும் நேரடி கள ஆய்வுகள் மூலம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக வரைபடமாக்குவார்கள். வெள்ளப் பாதிப்பு இடங்கள், கழிவுநீர் பொங்கி வழியும் பகுதிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற கடைகள் ஆகியவை கண்டறியப்பட்டுப் நிரந்தரத் தீர்வுகள் கண்டறியப்படும்.

பஸ் நிறுத்தங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் வழிகளும் இதில் ஆராயப்படும். இதன் அடிப்படையில் சாலைகளில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+