வீரப்பனை நிச்சயம் பிடிப்போம் .. தமிழக டி.ஜி.பி.
சென்னை:
வீரப்பனைப் பிடிப்பதற்காக சத்யமங்கலம் காட்டுக்குச் சென்றுள்ள கூட்டு அதிரடிப் படைப் போலீஸார் இந்த முறை கண்டிப்பாக வீரப்பனைப் பிடித்தே தீருவர்என்று தமிழக டிஜிபி. ராஜகோபாலன் சென்னையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த முறை எப்படியாவது வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இரு மாநில அதிரடிப்படையினரும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் போலீஸாரும் உதவி புரிந்து வருகின்றனர்.
மேலும் வீரப்பன் பதுங்கியிருக்கும் சத்யமங்கலம் காட்டுப் பகுதியில் வாழும் மக்களும் போலீஸாருக்கு, வீரப்பன் குறித்துத் தங்களுக்குத் தெரிந்ததகவல்களைக் கூறி வருகிறார்கள்.
மேலும், சத்தியமங்கலம் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடம், கூட்டு அதிரடிப் படை போலீஸார் மிகவும் கடுமையாகவோ, அவர்களை துன்புறுத்தும்வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்று அதிரடிப்படை போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில், வீரப்பனின் நடமாட்டம் குறித்து, வனப்பகுதியை சுற்றி வசித்து வரும் மக்கள் விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார்கள்.
காட்டுப்பகுதியில் பல மறைவிடங்களில் வீரப்பன், கண்ணி வெடிகளையும், ஜெலாட்டின் குச்சிகளையும் மறைத்து வைத்திருந்தான் என்று வெளியாகும் செய்திகளில்சிறிதளவும் உண்மையில்லை.
கார்கில் போரின் போது பயன்படுத்தப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை, வீரப்பனைப் பிடிப்பதற்குத் தர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புஅமைச்சரவையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications