புதுவையில் அமைச்சர் கண்ணன் டிஸ்மிஸ்
புதுவை:
புதுவையில் சில தினங்களாக சக அமைச்சரை எதிர்த்து சட்டசபையில் தர்ணா நடத்திய பொதுப்பணித்துறைஅமைச்சர் கண்ணன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
புதுவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைப்பதற்கு மூல காரணமாக இருந்தார் அமைச்சர்கண்ணன். இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை வைத்து தனிக்கட்சி அமைக்க உதவ வேண்டும் என்றுசபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
ஜெயக்குமார் மீது புகார்:
இதற்கிடையே அமைச்சர் தேனி.ஜெயக்குமார் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வந்தார் கண்ணன். சமீபத்தில்சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், விடுதலைபுலிகளுக்கும் தொடர்பு உள்ளது. அவரைப் பதவி நீக்கம்செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.
சட்டசபை நடக்கும் போது, ஜெயக்குமாரை எதிர்த்து தர்ணா நடத்தினார். வெளிநடப்பும் செய்தார். இதையடுத்துபுதுவை சட்டசபையில் பெரும் மாற்றங்கள், திருப்பங்கள் ஏற்பட்டது.
முதல்வர் வீட்டில் சந்திப்பு:
பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் சண்முகம் வீட்டுக்குச் சென்று, தேனி ஜெயக்குமாருக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று எழுத்து மூலம் புகார் கொடுத்தார் கண்ணன்.
அப்போது அவரை அன்புடன் உபசரித்த முதல்வர் மாலையே அவரது பதவியை பறிக்கும் கடிதத்தை கவர்னர்ரஜினி ராயிடம் கொடுத்தார். இதையடுத்து கண்ணனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் ரஜினிராய்.
இந்நிலையில் முதல்வர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு. அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட கண்ணன்சட்டசபையில் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது.
அது அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை காற்றில் பறக்க விடுவது போல் இருந்தது. எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் அதை சட்டசபையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கண்ணன் கட்டுப்பாடுஇல்லாமல் சட்டசபையில் நடந்து கொண்டார். அதனால் அவரது பதவியை டிஸ்மிஸ் செய்ய கவர்னரிடம் கடிதம்கொடுத்தேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications