சவுதியில் நவாஸ் ஷெரீப்
துபாய்:
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரும்அவரது குடும்பத்தினரும் தனி விமானம் மூலம் சவுதி அரேபியா வந்தடைந்தனர்.
நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 19 பேரும் சேர்ந்து சவுதி அரச குடும்பத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில்ல சவுதிஅரேபியாவிலுள்ள ஜெட்டா நகருக்குச் சென்றனர்.
நவாஸின் பெற்றோர்கள், மனைவி குல்சும், இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், சகோதரர்கள் சபாஷ் ஷெரீப், அப்பாஸ் ஷெரீப் அவர்களதுமனைவிகள், அவர்களது குழந்தைகள் மற்றும் மருமகன்கள் நாடு கடத்தப்பட்டனர்.
முன்னதாக, விமானக்கடத்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்களுக்காக நவாஷ் ஷெரீப் மேல் தேச துரோக வழக்குத் தொடரப்பட்டது. அவருக்குப்14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுக்களிலும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து நவாஷ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவிநவாஸூக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் சவுதிஅரேபியாவுக்கு வந்து நவாஸ் சிகிச்சை பெறலாம் என்று சவுதி அரேபியா கூறியது. மேலும் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி ரபீக் தரார் தனது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்தார்.
அவரது சிறைத் தண்டனை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம், சொத்துக்கள் பறிமுதல், தேர்தலில்நிற்கத் தடை ஆகியவை தொடரும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதையடுத்து நவாஸ் ஷெரீபும், அவரது குடும்பத்தாரும் ஞாயிற்றுக்கிழமைநாடுகடத்தப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications