போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறந்ததா?
திருவண்ணாமலை:
போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறந்ததாக வதந்தி கிளம்பியதையடுத்து திருவண்ணாமலையில் பதற்றம் ஏற்பட்டது.
மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந் நகரின் வேங்கிக்கால் ஊராட்சியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்கப்பட்டது. அமைச்சர் பிச்சாண்டி இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் இரண்டாவது முறையாக சொட்டு மருந்து வழங்கப்பட்ட ஒரு குழந்தை சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. இந்தக்குழந்தை பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது.
இதையடுத்து சொட்டு மருந்தால் தான் குழந்தை இறந்ததாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில்குதித்தனர். வேலூர்-திருவண்ணாமலை சாலையில் மறியலும் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சொட்டு மருந்து போட்டுக் கொண்ட பல குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் அனைவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் புரளி கிளம்பியது. இதனால், மக்களின் அச்சம் அதிகரித்தது.
சொட்டு மருந்து போட்ட பின்னர் சும்மா இருந்த குழந்தைகைளயும் தூக்கிக் கொண்டு பெற்றோர்கள் மருத்துவனைகளில்குவிந்தனர். கோபத்தில் இருந்த மக்கள் பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
பல கிராமங்களில் இருந்தும் மக்கள் குழந்தைகளுடன் அரசு மருத்துவனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் குவிந்தனர்.இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
பதட்டத்தைத் தணிக்க போலீசார் வேன்களிலும் ஜீப்களிலும் மைக் கட்டிக் கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்து சொட்டுமருந்தால் குழந்தை இறந்ததாகக் கூறப்படுவது இது வெறும் புரளி தான் என விளக்கமளித்த வண்ணம் இருந்தனர்.
டாக்டர் விளக்கம்:
இது குறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து கூறுகையில்,
இது வெறும் வதந்தி தான். கொஞ்சம் கூட உண்மையில்லை. ஒரு சொட்டு மருந்து குப்பியில் இருந்து 10 குழந்தைகளுக்கு மருந்துகொடுக்கிறோம். மருந்தில் குறை இருந்திருந்தால் மற்ற 9 குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், அப்படி ஏதும்நடக்கவில்லை. மருந்தில் எந்தக் குறையும் இல்லை என்றார்.
அதே போல மருந்தில் எந்தக் குறையும் என தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications