வீரப்பன் காட்டுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படை
கோவை:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவு கோவை வந்து சேர்ந்தது. இந்தப் படை வீரர்கள்சத்தியமங்கலத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இவர்களது பணி இன்னும் இரண்டு நாட்களில் துவங்க உள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியை தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் நாடின. இதன் பலனாகமத்திய அரசு, எல்லைப் பாதுகாப்பு படையை அனுப்பி வருகிறது.
எல்லைப் பாதுகாப்பு பணியின் முதல் குழு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரிக்கு வந்து சேர்ந்தது. இந்தக் குழு மற்றவீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
கூடாரங்கள் அமைப்பது முதல் உணவுகளைத் தயார் செய்வது வரை அனைத்துப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொண்டுவருகிறது.
இதையடுத்து படை வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் 158 பெட்டிகளில் கேரளா எக்ஸ்பிரஸ் மூலம் ஈரோடு வந்து சேர்ந்தது.இந்த ஆயுதங்கள் அனைத்தும் பண்ணாரி முகாமுக்குள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
இந் நிலையில் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு சிறப்பு விமானம் மூவம் நேற்றிரவு எல்லைப் பாதுகாப்பு படையினர் வந்துசேர்ந்தனர். கஜராஜா என பெயரிடப்பட்ட விமானத்தில் முதல் கட்டமாக 184 படை வீரர்கள் வந்து சேர்ந்தனர்.
இவர்களை தமிழக அதிரடிப்படையின் 7 பஸ்களும், கர்நாடக அதிரடிப்படையின் 3 பஸ்களும் அழைத்துச் சென்றன.இப்படைக்கு எல்லைப் பாதுகாப்பு படை பிரிவின் டி.ஐ.ஜி பீட்டர் தலைமை ஏற்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் இன்று பண்ணாரிக்குச் சென்று இரண்டு நாட்கள் தாக்குதல் குறித்து திட்டமிடுகின்றனர். அதற்குள் இன்றும்நாளையும் மற்ற வீரர்கள் விமானம் மூலம் வந்து சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications