உசிலம்பட்டியில் பஸ்ஸை மறித்து ரூ.11 லட்சம் கொள்ளை
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசலம்பட்டி அருகே, பஸ்ஸை மறித்து ரூ 11லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஜி என்பவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேஷியராக வேலை செய்து வருபவர் கருப்பையா.இந்நிறுவனத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதற்கான பணத்தை வசூலிப்பது கருப்பையாவின் வழக்கம். சம்வபம் நடந்த நாளன்று இரவு பணம் வசூல் செய்ய கருப்பையா மதுரை சென்றார். மதுரையில் ரூ.11 லட்சம் வசூல் செய்த பின்பு தனியார் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பஸ் உசிலம்பட்டிக்கு அருகே தொட்டப்ப நாயக்கனூர் பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பஸ்ஸை ஒரு கார் வழிமறித்தது.
பஸ் நின்ற பின் காரிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் ஏறி கருப்பையா தங்களிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிதாக பயணிகளிடம்கூறி விட்டு கருப்பையாவை பஸ்ஸிலிருந்து இறக்கினர்.
கருப்பையாவிடமிருந்து பணப்பைய பிடுங்கிக் கொண்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications