தமிழகத்தில் மதவெறி சக்திகள் தலைதூக்கும் அபாயம்
சென்னை:
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் மதவெறி சக்திகளை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று மூப்பனார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மூப்பனார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாளையங்கோட்டையில் மசூதி ஒன்றில் நோன்பு செய்து கொண்டிருந்த ஒருவரை வன்முறைக் கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசிக் கொன்றது.
முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் நோன்பு செய்து கொண்டிருந்த வாலிபரை அடையாளம் தெரியாத கும்பல் வெடிகுண்டு வீசிக் கொன்றதுகொடூரத்தின் உச்சகட்டம்.
இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு அடிப்படையான காரணமே மதவெறிதான்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவம்:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் பேசினார். இதுவும் மதவெறியின்வெளிப்பாடுதான்.
இந்தப் பேச்சையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் மதவெறிச் சக்திகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
இந்த மதவெறிச் சக்திகள் தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி:
தமிழகத்தில் நெல்லை, குமரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி இயக்கங்கள் விஷமத்தனமான பிரச்சாரத்திலும்,செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
பாரதிய ஜனதாக் கட்சியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடப்பதால், இந்தச் சக்திகள் தைரியமாகச் செயல்படுகின்றன.
காயிதே மில்லத்:
நெல்லை பஸ் நிலையத்துக்குக் காயிதே மில்லத் பெயரை வைக்கக் கூடாது என்று சில இந்து மதவெறி அமைப்புக்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன.மசூதியில் நடந்த படுகொலை, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தில் மதவெறிச் சக்திகள் தலைதூக்க ஆரம்பித்து விட்டன. திமுக அரசுக்கும் இந்தச் சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக விளங்க வேண்டும் என்றுதனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications