பாபர் மசூதி இடிப்பை பா.ஜ.க. தடுக்கவில்லை
டெல்லி:
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த செயல் திட்டமிட்ட ஒன்று. வாஜ்பாய்இதுதொடர்பாக கூறி வருவதில் உண்மையில்லை என்று பிரபல காந்தீயவாதி நிர்மலாதேஷ்பாண்டே கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில், முக்கிய சாட்சி நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பான வழக்கில் சாட்சி அளிக்க வருமாறு அவருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து நிர்மலா கருத்துத் தெரிவிக்கையில், இதுதிட்டமிட்ட ஒன்று. இதை யாரும் மறுக்க முடியாது. தனது அமைச்சரவை சகாக்கள்,அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது குற்றம் இல்லை என்றுகூறும் பிரதமர் வாஜ்பாய், மசூதியை இடிப்பதை தடுக்க இவர்கள் முயன்றார்கள் என்றுகூறுவாரா?
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்த மூன்று பேரும் அந்த இடத்தில்இருந்தனர் என்பதை நான் இறுதியாக கூறுவேன். என்னைப் பொருத்தவரை மசூதிஇடிப்பு திட்டமிட்ட செயல்.
மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்டுவது என்பது தேசத்தின் உணர்வு,தேசிய உணர்வு என்று பிரதமர் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை யாராவதுதேசிய உணர்வு என்று சொல்வார்களா?
தங்களது தொண்டர்கள் மசூதியின் கோபுரங்கள் மீது ஏறி இடித்தபோது, அவர்களைஇந்த அமைச்சர்கள் தடுத்தார்களா? கீழே இறங்கி வருமாறு கூறினார்களா?. மசூதிநிச்சயம் இடிக்கப்படும் என்பது அங்கிருந்த அனைவருக்கும் நிச்சயம் தெரியும்.
மசூதி இடிப்பில், மகாத்மா காந்தியைத் தொடர்புப்படுத்துவது அவரை இரண்டாவதுமுறையாக சுட்டதற்குச் சமம்.
மசூதி எப்படி இடிக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றம் சாட்டுகிறார்.அவர்கள் தான் குண்டு வைத்தனர் என்கிறார். இவை குறித்தெல்லாம் விசாரிக்கப்படவேண்டும். ஆனால் அங்கு குண்டு வைக்கப்பட்டதாக நான் உணரவில்லை. வெடித்தசத்தம் எதையும் நான் கேட்கவில்லை என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications