தீவிரவாதத்தை விட்டால் பேசலாம் .. வாஜ்பாய்
டெல்லி:
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக நிறுத்தினால் காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தஇந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் வாஜ்பாய் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
சொந்தத் தொகுதியான லக்னோவிலிருந்து தன்னைப் பார்க்க வந்திருந்த எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
ரம்ஜான் மாதத்தையொட்டி எல்லைப் பகுதியில் சண்டை நிறுத்தம் கடை பிடிக்கப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது எல்லைப் பகுதிமிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே ஒரு சில தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புக்கள் காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், சண்டை நிறுத்தத்திற்கும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. ஆயினும் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் வாழும் மக்கள் தற்போது அமைதியை விரும்புகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் சில தீவிரவாத அமைப்புக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு நல்ல செல்வாக்கு உள்ளது.காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்குப் பல நாடுகள் கோரிக்கைகள் கொடுத்து வருகின்றன.
எனினும், எல்லைப் பகுதியில் முழுவதுமாக தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தேவையான முயற்சிகளை எடுக்கும்என்றார் வாஜ்பாய்.
யு.என். ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications