பன்றிகளைக் கடத்த முயன்ற கும்பல் கைது
பொகோதா:
ஏழை விவசாயியைக் கடத்த முயன்று, அவரிடம் பணம் தேறாது என்பதால் அவரதுபன்றிகளைக் கடத்த முயன்ற கும்பலை கொலம்பியா போலீஸார் கைது செய்தனர்.
கொலம்பியா தலைநகர் பொகோதாவிலிருந்து சில மைல் தொலைவில் உள்ளஆர்ஜெலியா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவிவசாயியை சிலர் கடத்திச் சென்றனர்.
ஆனால் கடத்திய பிறகுதான் அவர் பரம ஏழை என்று அவர்களுக்குத் தெரிந்தது.அவரிடமிருந்து பணம் பெறுவது இயலாத காரியம் என்பதால், அவரை விட்டுவிட்டுஅவரது பண்ணையிலிருந்த பன்றிகளைக் கடத்த அவர்கள் திட்டமிட்டனர்.
விவசாயியை அவரது பண்ணைக்கு அழைத்துச் சென்று, தாங்கள் கொண்டு வந்திருந்தவேனில், பன்றிகளை ஏற்றுமாறு உத்தரவிட்டனர். அதற்குள் தகவல் தெரிந்த வந்தபோலீஸார் கடத்தல் கும்பலைக் கைது செய்தனர். இதனால் 14 விலையுயர்ந்த பன்றிகள்கடத்தப்படுவது தவிர்க்கப்பட்டது.
கொலம்பியா குற்றச் செயல்களுக்குப் பேர் போனது. இங்குள்ள அரசியல்வாதிகள்முதல் சாதாரண குடிமகன் வரை குற்றச் செயலில் ஈடுபடுவது சகஜமானது. உலகிலேயேஅதிக அளவில் குற்றச் செயல்கள் நடைபெறுவது இங்குதான் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications