டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி:
டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தான் ஆதரவ தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் தாக்குதல்நடத்தியதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம்என்று அஞ்சப்படுவதால் தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி இணை போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா கூறுகையில், ரம்ஜானையொட்டி ஜம்மு காஷ்மீரில்அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப் போவதாக பிரதமர் வாஜ்பாய்அறிவித்தார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளால் மேலும் ஆபத்துக்கள் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்புச் சம்பவமும்ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும்,போலீஸாருடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
இனிமேலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால்முடிந்த அளவுக்குப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம். போலீஸாரும், ராணுவ வீரர்களும் இணைந்துபாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
முன்னதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறுகையில், டெல்லி செங்கோட்டையில் உள்ளராணுவ முகாமில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் இன்னொரு ஊழியர்ஆகியோர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டுள்ள சண்டைநிறுத்த நீட்டிப்பை சீர்குலைக்கும் விதத்திலேயே இந்த தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சண்டைநிறுத்த நீட்டிப்பில் எந்த மாறுதலுக்கும் இடமில்லை.
இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று கருத்துக்கள்பரவலாக எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதற்கான வாய்ப்புக்கள்இல்லை என்றார்.
17 ம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் ஷாஜகான் 120 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்டமானசெங்கோட்டையை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications