கவுண்டர்கள் பேரணிக்கு வந்த 2 பேர் சாவு
ஈரோடு:
ஈரோட்டில் நடந்த கவுண்டர் பேரவை பேரணியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டெம்போவேன் மோதி இறந்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் நல்ல குமாரம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சிவகுமார் (21) மற்றும் நல்லசிவம் (30).இவர்கள் இருவரும் ஈரோட்டில் நடந்த கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் பேரணியில் கலந்து கொள்ளமோட்டர் சைக்களில் வந்து கொண்டிருந்தனர்.
தாமரைக் குளம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது வாழைக்காய் டெம்போ ஒன்று அவர்கள் மீதுமோதியது. இந்த விபத்தில் சிவக்குமார் அதே இடத்தில் இறந்தார். நல்லசிவம் கோவை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இறந்தார்.
கவுண்டர் பேரவை மாநாடு:
முன்னதாக, ஈரோட்டில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் 5 வது மாநில மாநாடு ஞாயிற்றுகிழமைநடந்தது.
கொங்கு வேளாளக் கவுண்டர்களின் 5 வது மாநில மாநாட்டையொட்டி பெரும் பேரணி நடந்தது. சிக்கய்யநாயக்கர் கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, சோலர் பிரிவில் முடிவடைந்தது. மாலை 4 மணிக்கு துவங்கியபேரணி இரவு 8. 30 மணிக்கு முடிந்தது.
ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள்பெருமளவில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியின் போது கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் விவசாய விலை பொருட்களின் நிலையை சித்தரிக்கும் வகையில் பேனர்கள் எழுதிக் கொண்டு தொண்டர்கள்பேரணியில் கலந்து கொண்டனர். பேனர்களில் ஈரியோபைடால் காய்ந்த தென்னை மரம், பொதுமக்கள் வாங்கும்வகையில் கட்டுபடியான விலை ஆகியவை குறித்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
தீரன் சின்னமலை திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில், முன்னாள் எம்,பி., சி.கே குப்புசாமி, மாநில பொருளாளர்தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications