மகாபலிபுரம் நுழைவுக் கட்டணம் குறைகிறது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்திலுள்ள புகழ்பெற்ற கடற்கரை ஓய்வு விடுதியின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழகசுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மகாபலிபுரத்தில் திங்கள்கிழமை மத்திய மற்றும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் இணைந்து நடத்திய நடன விழா 2001 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் சுரேஷ் ராஜா கூறியதாவது:
மகாபலிபுரத்தின் வளர்ச்சிக்காக தமிழக அரசு 1998 - 99 ம் ஆண்டுகளில் ரூ 22 லட்சம் ஒதுக்கியது. சமீபத்தில் இங்கு அமைக்கப்பட்ட பூங்காவில்சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
சோடியம் விளக்குகள் அமைப்பதற்கு ரூ 10 லட்சம் செலவிடப்பட்டது. இதற்காக 1999 - 2000 ஆண்டுகளில் மாநில அரசு ரூ 10 லட்சத்தை ஒதுக்கீடுசெய்தது.
திறந்த வெளி கண்காட்சியகம் அமைப்பதற்காக மாநில அரசு ஏற்கனவே ரூ 10 லட்சத்தை ஒதுக்கியது. கண்காட்சியகம் அமைப்பதற்கான பணிஏற்கனவே முடிவடைந்து விட்டது என்றார் சுரேஷ் ராஜன்.
முன்னதாக ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ள இந்த நடன விழாவை சட்டசபை துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications