விவசாயிகளுக்கு விஞ்ஞானியின் டிப்ஸ்
கோவை:
உலகமயமாக்கல் சூழலில் சந்தைக் கேற்ற முறையில் சாகுபடியை மாற்றிக் கொள்ள வேண்டும் என விவசாய விஞ்ஞானி எம். எஸ் சுவாமிநாதன்பேசினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 46 பேருக்கு பல்வேறு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில், முன்னாள்மாணவர் விருதைப் பெற்ற விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் பேசியதாவது:
உலகமயமாக்கல் இன்னும் சில மாதங்களில் இந்தியாவிற்கு வரப் போகிறது. இந்த சந்தையை எதிர்கொள்ள இந்திய விவசாயிகள் தயாராக இல்லைஎன எத்தனை நாளைக்குத் தான் சொல்ல முடியும்.
இதே காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்திய வேளாண்மைக்கு நெருக்கடி நிலை தான் வந்து சேரும். இந்த நெருக்கடி நிலையைத் தவிர்க்க சரியானமுறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
பண்ணை நிலங்களை வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பயனற்ற தரிசு நிலங்களில் வீடு கட்டுதல், தொழிற்சாலைகள்அமைத்தல் வேண்டும்.
இப்போதுள்ள விவசாயிகளுக்கு சரியான ஆலோசனை கூற ஆள் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு நவீன யுக்திகள் கிடைக்காமல் போய் விட்டது.
எனவே, நவீன யுத்தியைக் கையாளவும், எதிர்வரும் பிரச்னையை எதிர்கொள்ளவும் மத்திய அரசும் வேளாண்மைத் துறையும் தக்க நடவடிக்கையை உரியகாலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
விவசாய விலை பொருளுக்கு விலை வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க சந்தைக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்யும் யுக்தியைகையாள வேண்டும். இத்தகைய யுக்தியை அரசு தர வேண்டும்.
உதாரணமாக, ஆந்திராவில் புகையிலை விவசாயம் அதிகரித்து வருகிறது. இந்த புகையிலை உற்பத்தியை குறைக்கச் சொல்ல வேண்டும். புகைப் பிடிப்பதற்குஎதிரான பிரச்சாரம் மேற்கொண்டு வரும்போது, புகையிலை உற்பத்தியை குறைக்க வேண்டும் என்பதை விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.
இன்னும் பத்து ஆண்டுகளில் புகையிலை உற்பத்தியை கணிசமாகக் குறைக்க வேண்டும். இந்த முறையை ஜப்பான் போன்ற நாடுகள் கையாள்வதால், சந்தைப்பொருளாதாரம் நன்றாக இருந்து வருகிறது என்றார் சுவாமிநாதன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications