புதை மணலில் சிக்கி 4 பேர் சாவு
திருச்சி:
திருச்சி மாவட்டம் கல்லணையில் புதை மணலில் சிக்கி அண்ணன், தங்கை உள்பட 4 பேர் பலியானார்கள்.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அகநகரில் வசித்து வருபவர் ராஜன் (55). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் மெஷினிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மகன் ராபர்ட் மகேஷ் (29). இவரும் அதே தொழிற்சாலையில் பிட்டராக வேலை செய்து வந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ராபர்ட் மகேஷ் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். செவ்வாய்க்கிழமை ராபர்ட் மகேஷ், அவரது தங்கை ஜோதி,வேலைக்கார சிறுமி லீலா உள்பட 15 பேர் கல்லணைக்குச் சுற்றுலா சென்றனர்.
கல்லணைக்கு வேன் வந்ததும் அனைவரும் வேனை விட்டு இறங்கி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வினோத் (12) என்ற சிறுவன்கல்லணையின் கொள்ளிடம் மணல் போக்கி பிரிவு பகுதியில் ஆற்றுக்குள் இறங்கினார். அங்கு ஏராளமான புதை குழிகள் உள்ளன. இதனால் வினோத்தண்ணீருக்குள் குதித்ததும் அவரை புதை மணல் இழுத்தது. அவர் அலறித் துடித்தார்.
உடனடியாக பார்த்திபன் (17) என்பவர் தண்ணீருக்குள் குதித்தார். அவரும் புதை மணலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து ஜோதி (17) தண்ணீருக்குள்குதித்தார். அடுத்ததாக லீலா (15) தண்ணீருக்குள் குதித்தார்.
புதை மணலில் சிக்கிய அனைவரையும் காப்பாற்றுவதற்காக ராபர்ட் மகேஷ் தண்ணீருக்குள் குதித்தார். ஆனால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை.ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் குதித்தது மூழ்கினர்.
பின்னர் கரையில் நின்று கொண்டிருந்த உறவினர்களின் பரிதவிப்பைப் பார்த்த அங்கிருந்த சிலர் ஆற்றுக்குள் குதித்து மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். இதில்வினோத் மட்டும் மீட்கப்பட்டார்.
இறந்த ராபர்ட் மகேஷ், திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அவர் சுற்றுலா வந்த போது அவரது மனைவி வித்யாவும், அவரது 6 மாதகுழந்தையும் சுற்றுலாவுக்கு வரவில்லை.
இறந்த ஜோதி (17) ராபர்ட் மகேஷின் தங்கை. அவர் கல்லூரி மாணவி. புதை மணலில் இறந்த லீலா இவர்கள் வீட்டில் வேலை செய்து வந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications