போலீசுக்கு "டீ கொடுத்த கைதி
சேலம்:
போலீசாரைத் தள்ளி விட்டு, கைவிலங்குடன் தப்பி ஓடிய மும்பைக் கைதியைப்போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பையில் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக்கொள்ளையடித்து, போலீசுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த ஒரு திருடனை போலீசார்கைது செய்தனர்.
மும்பையில் கைது செய்யப்பட்ட அவர், கொள்ளையடித்த பொருட்களைச் சேலத்தில்பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, போலீசைத் திசை திருப்பினார். இதையடுத்து வகோலாபகுதியைச் சேர்ந்த விஜய் ராம்ஜி (24) என்ற அந்த இளைஞரை அழைத்துக் கொண்டுமும்பை போலீஸார் சேலத்திற்கு வந்தனர்.
எப்படியும் தப்பி விடுவார் என எண்ணிய போலீசார் முன் ஜாக்கிரதையாக கைவிலங்குடன் கொண்டு வந்தனர். ரயிலில் அதிகாலையில் சேலம் வந்திறங்கியஇவர்கள், அம்மாபேட்டையில் உள்ள ஒரு கடையில் டீ குடிக்கச் சென்றனர்.
போலீசார் மும்முரமாக டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி ராம்ஜி கைவிலங்குடன் தப்பி விட்டார். போலீசார் எவ்வளது துரத்தியும்"வழக்கம்போல பிடிக்க முடியாமல் தோல்வி முகத்துடன் திரும்பினர்.
மும்பையில் கைது செய்து, சேலத்தில் தப்பவிட்ட அவர்கள் செய்வதறியாது உள்ளூர்போலீசில் புகார் செய்தனர். தப்பிய கைதியை சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications