அலுவலகம் போக சகுனம் பார்க்கும் ஜார்கண்ட் முதல்வர்
ராஞ்சி:
பிகாரைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கன்ட் மாநிலத்தில் சகுனம் சரியில்லாத காரணத்தால், புதிய அலுவலகத்திற்குச் சென்று பணியைத் தொடங்ககாலம் தாழ்த்தி வருகிறார் புதிய முதல்வர் பாபு லால் மராண்டி.
டிசம்பர் 14 ம் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை நல்ல நாட்கள் இல்லை என்று ஜோதிடர்கள் சிலர் கூறியதால் நாள், நட்சத்திரம் பார்த்து சுபதினத்தில்புதிய அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் முதல்வர் மராண்டி.
ஜனவரி 14 ம் தேதி வரை புதிய அலுவல்களோ அல்லது புதிய திட்டங்களோ தொடங்கக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை. அதனால் இந்த நாட்களில்புதிய அலுவலகத்திற்குச் சென்று பணியைத் தொடங்க வேண்டாம் என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
ஒரு புறம் முதல்வர் புதிய அலுவலகத்திற்குச் செல்லாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் முதல்வரின் அலுவலகத்தில் பணிபுரியும்ஊழியர்கள் புதிய அலுவலகத்திற்கு முதல்வர் செல்லும் தேதி குறித்து பெட் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனவரி 15 அல்லது 16 ம் தேதி முதல்வர் மராண்டி புதிய அலுவலகத்திற்குச் செல்வாரா, மாட்டாரா என்று ரூ. 100முதல் ரூ. 500 வரை பெட் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் முதல்வர் அலுவலக ஊழியர்கள்.
அவர்களில் ஒருவர் கூறுகையில், ஜனவரி 16-ம் தேதி முதல்வர் புது அலுவலகத்திற்குச் செல்வது முறையல்ல.ஏனெனில் டிசம்பர் 14 முதல் ஜனவரி 14 ம் தேதி வரை சகுனம் சரியில்லாத நாட்கள். அதன் பாதிப்பு 16-ம் தேதிவரை இருக்கும். இதனால் 16 ம் தேதி முதல்வர் புதிய அலுவலகத்துக்குச் செல்வார் என்று பெட் கட்டினால்தோல்விதான் கிடைக்கும் என்றார்.
15-ம் தேதி முதல்வர் புதிய அலுவலகத்துக்குச் செல்வார் என்று பெட் கட்டிய ஒருவர் கூறுகையில், ஜனவரி 15 ம்தேதிதான் புதிய அலுவலகத்திற்குள் நுழைவார். ஜனவரி 15 ம் தேதி திங்கள்கிழமை. நல்ல நாள். வாரத்தின் முதல்நாள். அலுவலக வேலைகளைத் தொடங்குவதற்கு உகந்த நாள் என்றார்.
ஜார்கன்ட் சட்டசபையில் உள்ள நிதி, நலத்துறை, கிராம நகர்ப்புற வளர்ச்சித்துறை, சட்டம் மற்றும் வருவாய்த்துறைஆகிய துறைகள் ஜனவரி 3 ம் தேதி அலுவலகத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.தற்போது டொரன்டா நகரில் முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications