வாரியம் வேண்டும் .. வன்னியர்கள் கோரிக்கை
சென்னை:
வன்னியர் சமுதாய மக்களின் சொத்துக்களை பிற சமுதாயத்தினர் அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில் வன்னியர் நல வாரியம் அமைக்க வேண்டும்என்று வன்னியர் சங்கத் தலைவர் நடராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் வன்னியர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களைபிற சமுதாயத்தினர் அனுபவித்து வருகிறார்கள். இதனால் வன்னிய சமுதாயத்தினருக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
இந்த நிலை மாற அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதாவது அரசு வன்னியர் நல வாரியம் அமைத்து வன்னியர் சமுதாயத்தின் துயர் துடைக்க வேண்டும்.
வன்னியர் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்வதேயில்லை. வன்னியர் சமுதாயத்துக்கு ஆதரவான பதிலை அரசு இதுவரை கொண்டு வரவில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் குறைகள் களையப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவாதம்அளித்துள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான மதச்சார்பற்ற முன்னணி வெற்றி பெற்றால், அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றார்நடராஜன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications