கொலை வழக்கு ..கிருஷ்ணசாமியை விடுவிக்க எதிர்ப்பு
சென்னை:
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட சூபர்வைசர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதியதமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விடுவிக்கக் கூடாதுசூபர்வைசரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட சூப்பர்வைசர் அந்தோணிமுத்து என்பவர் 98-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 11 பேர் மீதுவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு சம்பந்தம் ஏதும் கிடையாது எனவும்இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யவும், தன்னை இந்த வழக்கிலிருந்துவிடுவிக்க வேண்டும் என கோரி கிருஷ்ணசாமி சென்ற மாதம் சென்னை உ.யர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட அந்தோணி முத்துவின் மனைவிஅந்தோணியம்மாள் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என மனு ஒன்றைதாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் கொலை செய்யப்பட் வழக்கில் கிருஷ்ணசாமிக்கு முக்கியமான பங்குஇருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.கிருஷ்ணசாமி குற்றவாளியா இல்லையா என நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்.
என் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து கிருஷ்ணசாமியை விடுதலைசெய்யக்கூடாது. மேலும் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கையும்ரத்து செய்யக்கூடாது என் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
