அதிரடிப்படையால் கிராம மக்களுக்குத் தொல்லை?
மேட்டூர்:
வீரப்பனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸாரால் சத்யமங்கலம் அருகே கொளச்சல் பகுதியில் உள்ள மக்களுக்கு தொல்லைஏற்பட்டுள்ளதால் அவர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.
கொளத்தூரை அடுத்து உள்ளது பெரியதண்டா கிராமம். இங்கு லம்பாடி இன மக்கள் வசித்து வருகிறார்கள்.
போலீஸார் கடந்த வாரம் நாயக்கன்தண்டாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சங்கர் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காகசங்கரைப் பிடித்துச் சென்ற போலீஸார் அவரை பவானி நீதிமன்றத்தில் காவல் வைத்துள்ளனராம்.
போலீஸார் அடிக்கடி இங்குள்ள ஆட்களைப் பிடித்துச் செல்வதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. போலீஸாரால் தொல்லை வரலாம் என்று இங்குவாழும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து லம்பாடி பஞ்சாரா சேவா சங்க மாவட்டத் தலைவர் பீமன் கூறுகையில், அதிரடிப்படையால் கிராம மக்களுக்குத் தொல்லை ஏற்படாது எனஅரசும், அதிரடிப்படை அதிகாரிகளும் அறிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் எங்கள் கிராமத்தில் போலீஸார் வந்து ஆட்களைப் பிடித்துச் செல்வதைப் பார்க்கும் போது மீண்டும் பழைய நிலை ஏற்படலாமோ என்றுதெரிகிறது என்றார்.
அதிரடிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதால் வனப்பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்களும், விறகு வெட்டிகளும் காட்டுக்குள் செல்வதில்லை.அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளையும் அதிரடிப்படையினர் அடித்துக் கொன்றனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் இங்கு வாழும்கிராம மக்கள் இங்கிருந்து வெளியேறவும் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications